தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Oct 3, 2012

நந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்

கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெரும் சர்ச்சைகளையும், யூகங்களையும் உள்ளடக்கியதாக பொன்னியின் செல்வன் இருக்கிறது. அதன் முடிவில் ஏகப்பட்ட வினாக்களை மக்கள் முன் வைத்துவிட்டு ஓய்ந்துவிடுகிறது. தனக்கு பின்னால் வரும் எழுத்தாளர்கள் இவ்வாறான கதைகளை எழுதுவார்கள் என்று கல்கியே குறிப்பிட்டுள்ளார்.

அப்படி பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களைக் கொண்டே எழுதப்பட்ட நாவல் நந்திபுரத்து நாயகி. பொன்னியின் செல்வனை முடித்தவர்கள், அதன் தொடர்ச்சியான விக்கிரமனின் நாவலை தவறாமல் வாசியுங்கள்.

விக்கிரமனின் நந்தி புரத்து நாவலை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

நன்றி.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

Sep 8, 2012

கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்


கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,. சிலரினை அலறி அடித்துக் கொண்டு ஓட வைத்துவிடும். காரணம் அதன் பெரிய தோற்றம். முதன்முதலாக பொன்னியின் செல்வனை கண்டபோது அதன் ஐந்து தொகுதிகளின் அளவினைக் கண்டு பயந்து ஓடியிருக்கிறேன். இருந்தும் என் அன்னை பொன்னியின் செல்வனின் சிறு சிறு கதாபாத்திரங்களை வரை சொல்லும் போது, ஆசையை அடக்கமுடியாமல் வியந்திருக்கிறேன்.

கல்கியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டாலும், ஏனோ பொன்னியின் செல்வன் மட்டும் இன்னும் பலரை சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி அதன் கனம் சிலரை வருந்தம் கொள்ள வைக்கின்றதோ அதே போல அச்சு புத்தகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வன் புத்தகமும் பலரை துன்பபட வைக்கிறது. 250 ரூபாய்க்கு சிறியவடிவில் கிடைத்தாலும், ஏதோ மூன்றாம் தர செக்ஸ்புத்தகம் போன்று அது இருப்பதால் பலரும் விரும்புவதில்லை. சற்று தரமாக அழகிய படங்களுடன் கூடிய புத்தகங்கள் 2500 க்கும் மேல்தான் கிடைக்கின்றன என்பதை புத்தக சந்தையில் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இப்போது எந்த பிரட்சனையும் இல்லை. பொன்னியின் செல்வன் ஒலிபுத்தக வடிவில் இலவசமாக கிடைத்தது. கல்கியின் காவியத்தினை காதால் கேட்டு மனத்தில் நிரப்பிக் கொள்ளும் சந்தர்ப்பம் நம் முன்னோர்களுக்கு வாய்க்கவில்லை, நமக்கு வாய்த்திருக்கிறது. இனிய புத்தகத்தினை இனிய குரலில் கேட்ட நானும் ஆவலாக உள்ளேன்.

01. பொன்னியின் செல்வன்-பாகம் ஒன்று-புதுவெள்ளம்

02. பொன்னியின் செல்வன்-பாகம் இரண்டு-சுழல் காற்று

03. பொன்னியின் செல்வன்-பாகம் மூன்று- கொலை வாள்

04. பொன்னியின் செல்வன்-பாகம் நான்கு- மணிமகுடம்

05. பொன்னியின் செல்வன்-பாகம் ஐந்து- தியாக சிகரம்


பதிவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

மார்ச் 13ம் தேதி இணைத்தது -

நண்பர் விஜயன் அவர்களின் மின்னஞ்சல் மூலம் இந்த இணைப்புகளிலிருந்து ஒலி புத்தகம் நீக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன். இணையத்தில் பதிவேற்றும் பெயர்தெரியாத நபர்களின் இணைப்புகளே இங்கே பகிரப்பட்டு வந்ததன. சிரமம் பாராமல் தரவிரக்கி வைத்துக் கொள்வதுதவிற நமக்கு வேறுவழியில்லை. மீண்டும் இணையத்தில் ஏற்றும் போது சட்டச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மிக எளிமையாக தரவிரக்கம் செய்யும் முறை இப்போதைக்கு சாத்தியமின்றி போய்விட்டது. நண்பர்கள் மன்னிக்கவும்.

http://www.itsdiff.com/kalkips இணைப்பின் கீழ் இதே ஒலிப்புத்தகம் கிடைக்கின்றது. ஆனால் மொத்த தொகுப்பாக தரவிரக்க இயலாது. மீண்டும் இணைப்பு சாத்தியமாகும் வரை இதனை பயன்படுத்திக் கொள்ள நண்பர்களை வேண்டுகிறேன்.


அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

மேலும் -
பொன்னியின் செல்வன் - திறனாய்வு

Sep 4, 2012

தமிழில் பெயரிடுவோம் - மா.தமிழ்ப்பரிதி மென்நூல்

குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயரிடுதல் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பல நேரங்களில் பெயர்களை தேடி அலையும் நிலை வந்துவிடுகிறது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைக்கும் காலம் மலையேறிவிட்டது. நவீனம் இப்போது அவசியமாகிவிட்டாலும், இன்னும் தாய் மொழி பற்று தவறிவிடவில்லை.

என் உறவினர் ஒருவரின் பெயர் இமையன். நெடுங்காலமாக அந்த பெயர் சொல்லி தான் அழைப்போம். பிறகு ஒருநாளில் தெரிந்தது அது இமயவரம்ப நெடுசேரலாதன் எனும் பெரும்பெயரின் சுருக்கம் என்று. வியப்புதான். இத்தனை பெரும் பெயரை கொண்டு அவர் இயங்குவது. இது போல பெரும் நீளமான பெயர்களை இப்போது மக்கள் விரும்புவதில்லை. பாஸ்போட் போன்ற விண்ணப்ப படிவங்களில் அதிகபட்சம் 13 எழுத்துகளே பெயருக்காக தரப்படுகின்றன. அயல்நாடுகளில் இருக்கும் பெயருக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இவைகளுக்கு ஏனோ நாமும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அழகாகவும், சிறியதாகவும், கருத்தாளம் மிக்கதாகவும் வைக்க விரும்புகின்றவர்களுக்காக நிறைய புத்தகங்கள் வருகின்றன. பலவற்றில் சிறப்பான பெயர்கள் எதுவும் இருப்பதில்லை என்ற போதும், எளிய விலையில் கிடைக்கின்ற என்பதற்காக நாம் வாங்குகிறோம். அந்தக் கவலை இந்த புத்தகத்தில் இல்லை.  ஆண்களுக்கான பெயர்கள், பெண்களுக்கான பெயர்கள் என தனித்தனியாக உள்ளன.

அத்துடன் வாகணங்களுக்கு தமிழக அரசு விதிப்படி தமிழிலிலேயே எண்களை எழுதலாம் போன்றவைகளும்,. வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்வைக்க ஆலோசனையும் சொல்லப்பட்டுள்ளது.

 தமிழில் பெயரிடுவோம் - மா.தமிழ்ப்பரிதி மென்நூல் பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
ஆசிரியரை தொடர்பு கொள்ள -

மா.தமிழ்ப்பரிதி
9382854321
tparithi@gmail.com

நன்றி,.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

Sep 3, 2012

கி.மு கி.பி மதனின் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்

மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர்.

தமிழனுக்கு எப்படி சரியான வரலாறு இல்லையோ,. அது போல உலக வரலாறுகளும் தமிழில் இல்லை. போர்களையும், மன்னர்களையும் சுற்றி திரியும் பாடபுத்தகங்கள் வரலாற்றை மிகவும் கசக்க செய்கின்றன. உண்மையில் வரலாறு தேனை விட இனிமையானது. நம் மனித இனம் என்றில்லை உலகம் தோன்றியது முதல் ஒவ்வொன்றையும் அழகாக விவரிக்கின்றது கிமு கிபி நூல்.

ஒலிப்புத்தகம் எழுத்தினை விட அதிக வலிமைவாய்ந்து திகழ்கின்றது. ஏ.சால்ஸ் அவர்களின் ஒலி ஏதோ இதற்காகவே படைக்கப்பட்டது போல அருமையாக இருக்கிறது. மெல்லிய வருடும் இசை அவ்வப்போது வந்து பலம் சேர்க்கிறது. இந்திய வரலாறு மிகவும் பிந்திய நிலையில்தான் வருகிறது என்றாலும் தொடக்கம் பாபிலோனியா நாகரீகத்தில் தொடங்கி இறுதியில் நம்மை வந்தடைவது சிறப்பான திட்டமிடுதலை உணர்த்துகிறது.

யூதம் கிறிஸ்துவமான வரலாறு, கிறிஸ்துவம் இஸ்லாமியமாக மாறிய வரலாறுகளை ஏற்கனவே அறிந்திருந்தால் உங்களுக்கு ஆதம் ஏவால் கதை தோன்றிய கதையும் தெரிந்திருக்கும். பாபிலோனியாவின் சிந்தனாவாதிகளின் கற்பனை சித்தாந்தமே இன்று உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த மூன்று மதங்களின் முன்னோடி. ஏனோ இந்து மதம் சற்று விலகி போய் நிற்க காரணம் எதுவென கி.மு கி.பி எனக்கு தெளிவுபடுத்தியது.

வருடங்களை பெரியதாக கொள்ளாமல் மதன் வரலாற்றை விவரிக்கும் போது, நிகழ்வுகளை விட காலம் பெரியதல்லை என்று தோன்றுகிறது. மிகவும் அரிதாகவே காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதுவே புத்தகத்திற்கு மிகுந்த வலிமை சேர்க்கிறது எனலாம்.

நிறைய சொன்னால் புத்தகத்தின் கேட்கும் போது உள்ள சுவாரசியம் குன்றிவிடும். அதனால் தரவிரக்கம் செய்யுங்கள் ரசித்து கேளுங்கள்.

கி.மு கி.பி - மதன் ஒலிபுத்தகம் பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

தொடர்பு கொள்ள -

பல நண்பர்கள் தங்களிடம் உள்ள மென் புத்தகத்தினை எவ்வாறு தருவது என்று வினவுகின்றார்கள். புத்தகத்தின் பெயரையும், அதன் இணைப்பையும் sagotharan.jagadeeswaran@gmail என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது கருத்துகளை தெரிவிக்கும் பகுதியிலும் தெரிவிக்கலாம். இணைப்பு இல்லை மென்புத்தகமாகவோ, ஒலிபுத்தமாகவோ இருக்கிறது என்றாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள். நன்றி.


முக்கியமான பதிவுகள்...

Amazon Contextual Product Adsநீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts