தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Feb 9, 2010

சதுரகிரி யாத்திரை












சதுரகிரி மலைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் ஊரில் பிறந்திருந்தாலும், சிறுவயதில் இரண்டு மூன்று முறை சென்றுவந்திருந்தாலும் அதனுடைய உண்மையான சிறப்புகளையும் அற்புதங்களையும் அறிந்ததில்லை.


சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சதுரகிரியின் சிறப்புகளை சொல்லும் ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதுமுதல் யார் சதுரகிரியின் சிறப்புகளை சொன்னாலும் எங்களுருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது என்று சொல்லுவதில் ஒரு இனம் தெரியாத சந்தோசம்; இருந்தாலும் அதன் உண்மையான அற்புதங்களை உணர்ந்தவனில்லை என்ற குற்ற உணர்வு எனக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை.


இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் வெகுதூரம் வந்துவிட்டாலும் அந்த மலையின் அடிவாரமாகிய தாணிப்பாறைக்கு சென்ற மாட்டுவண்டிப் பயணங்களும், அங்கிருக்கும் வழுக்குப்பாறையில் சருக்கிவிளையாடி கிழித்துக்கொண்ட டவுசர்களும்... ம்...ம்...

சதுரகிரியின் அற்புதங்களையும், போகத்தேவையான வழிகாட்டுதல்களையும் நண்பர் பிரபாகரன் அவர்கள் பதிப்பித்துக்கொண்டிருக்கிரார். இங்கு சென்று பாருங்கள்.

நீண்ட நாட்களுக்கு முன்பு kricons தனது வலைப்பூவில், சக்தி விகடனில் வந்த தொடரை தொகுத்து மென் புத்தகமாக கொடுத்திருந்தார். நல்ல புத்தகங்களை ஒரே இடத்தில் சேமிக்கும் முயற்சியாக இதோ நமது வலைப்பூவிலும்.

தொகுத்த kricons அவர்களுக்கு மிக்க நன்றி.

Click to download.

10 comments:

  1. Thank you for the book "Chaturagiri Yathirai"

    ReplyDelete
  2. வணக்கம், தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சதுரகிரி யாத்திரை பதிவிற்காக அன்புடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகங்கள், உங்களிடம் தயவுடன் எதிர்ப்பார்க்கின்றோம்.நான் வெளிநாடு வாழ் தமிழன் ஆவேன். நன்றி

    இரா. இராஜேஸ்வரன்

    ReplyDelete
  3. ///Dr.P.Kandaswamy said...
    Thank you for the book "Chaturagiri Yathirai"////

    உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி டாக்டர் சார். உங்களது பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. ////Rajesh said...
    வணக்கம், தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சதுரகிரி யாத்திரை பதிவிற்காக அன்புடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகங்கள், உங்களிடம் தயவுடன் எதிர்ப்பார்க்கின்றோம்.நான் வெளிநாடு வாழ் தமிழன் ஆவேன். நன்றி
    இரா. இராஜேஸ்வரன்////

    அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகங்கள் கிடைத்தால் பதிவிட்டுவிடுகிறேன் ராஜேஷ்.

    ReplyDelete
  5. சதுரகிரி மின்புத்தகம் டவுன்லோடு செய்து படித்துப்பார்த்தேன். மிக விரிவாக, நன்றாக இருந்தது. இணைப்பு கொடுத்த தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. வணக்கம், தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    Indra Soundar Rajan எழுதிய சிவமயம் புத்தகத்தை உங்களிடம் தயவுடன் எதிர்ப்பார்க்கின்றேன் நான் நன்றி

    ReplyDelete
  7. Anonymous12/9/14

    THank u very much

    ReplyDelete
  8. தோழா, இன்னும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகளை அப்லோட் செய்யலாம். க.நா.சு. அவர்களின் படைப்பகள், சுந்தர ராமசாமி, கவிஞர் விக்ரமாதித்யன், பிரமிள்,புதுமைப் பித்தன்,ஜெயகாந்தன்,ஜெயமோகன்,ஜே.கிருஷ்ணமூர்த்தி,கி.ரா.,சி.சு.செல்லப்பா,பாரதியார்,பாரதிதாசன்,கண்ணதாசன்,வண்ணநிலவன்,வண்ணதாசன்,தி.ஜானகிராமன்.....
    இவர்களின் படைப்புக்களையும் ஏற்றலாம்.
    அயல்நாட்டு இலக்கியப்படைப்புக்களையும் தயை கூர்ந்து ஏற்றவும்.
    டால்ஸ்டாய்,காரக்கி,காஃப்கா,ஹெமிங்வே,செகாவ்,தஸ்த்தாயெவ்ஸ்கி,டிக்கன்ஸ்,பாப்லோ நெர்தா,ஷேக்ஸ்பியர்,.......

    ReplyDelete
  9. Sir i was unable to download your file, please help me

    ReplyDelete
  10. Expecting your help to download the file

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts