தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 25, 2009

அவனும் அவளும்.


















எனக்குத் தெரிந்த தோழி ஒருவரின் தாம்பத்தியத்தில் எப்போதும் குளறுபடிகள் நடந்து கொண்டே இருக்கும். கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்கும். மன அமைதிக்காக அவர் ரமணி சந்திரன் அவர்களின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவரின் வாழ்கையில் நிறைய மாற்றங்கள். அந்தப் புத்தகங்களின் மூலம் தான் வாழ்க்கையின் சாரத்தைப் புரிந்து கொண்டதாகவும் கணவன் மனைவிக்கிடையில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைகளைக் களைவதற்கு புரிந்துணர்வு ஒன்றே அவசியம் என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும் கூறினார்.


குடும்பம் என்பது ஓர் அழகிய தேன்கூடு. அதில் இருக்கும் தேனீக்களை அன்பால்தான் பிணைக்க முடியும். அந்த அன்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ரமணி சந்திரன் அவர்களின் நாவல்கள் வலியுறுத்துகின்றன என்றால் மிகையில்லை.
நன்றி ரமணி சந்திரன் - ஓர் ஆய்வு என் உலகம்.


Click to download.


நழுவும் நேரங்கள் வாஸந்தி















மேல்நாட்டு விஞ்ஞான வாழ்க்கை முறை, இந்தியக் குடும்பங்களை ஊடுருவி, எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது!. அடித்தளம் இந்தியப் பண்பாட்டில் அமைந்திருந்த போதிலும், அதன்மீது அமைக்கப்படும் வாழ்க்கை என்னும் கட்டடம், மேல்நாட்டுச் சிந்தனைகளால் மாற்றம் பெற்றுள்ளது.


புதுமையும் பழமையும் கலந்த, இந்தப் புது விதமான வாழ்க்கை முறை, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்திலும் பல பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.


வாழ்க்கை என்பது இரயில் பயணம் அன்று, கருது வேறுபாடு ஏற்பட்டால், பிரிந்து சென்று மறந்துவிடுவதற்கு, நான் என்னும் அகங்காரத்தை அடக்கி, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான், இல்லறம் இனிய வீனையாகும். இக்கருத்தை அழகாகப் பின்னியிருக்கிறார் ஆசிரியர் வாஸந்தி.
Click to download.

Sep 16, 2009

அடிப்படைத் தமிழ் இலக்கணம். எம்.ஏ. நுஃமான்














சிறிது நாட்கள் இணையத்திற்கு வர இயலவில்லை. அதுவரை இங்கு வந்து சென்ற அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. சில நண்பர்கள் மின்அஞ்சலில் நலம் விசாரித்து இருந்தனர் அவர்களின் அன்புக்கு நன்றி என்று சொன்னால் போதாது, தலை வணங்குகிறேன்.

நண்பர் திரு அவர்கள் சில புத்தகங்களை பதிவிடசொல்லி மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். அவற்றை பெருமையாக இங்கு பதிவிடுகிறேன்.

"சுற்றிச் சுழன்று, சூறாவளிகள் பல கடந்து, நெருப்பாற்றில் நீந்தி தப்பி உயிர் பிழைத்து, ஐந்து கண்டங்களிலும் அடங்கியுள்ள பல தேசங்களிலும் பரவி விரவிக் கிடக்கும் தமிழர்களின் நெஞ்சில் சுடர் விட்டு எரியும் தமிழுணர்வை போற்றும் விதமாக திரு. எம்.ஏ. நுஃமான் அவர்களின் ''அடிப்படை தமிழ் இலக்கணம்'' என்கிற இந்த சிறந்த நூலை தாங்கள் வெளியிட்டு பல கோடி தமிழர்களின் மொழி அறிவை மேலும் செம்மைப்படுத்த உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களன்புள்ள
"திரு"


இதுபோல உங்களிடம் நல்ல புத்தகங்கள் இருந்தால் அனுப்பிவையுங்கள் பதிவிட்டுவிடுகிறேன்.

Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts